யார் பாரதி ! ! !

யார் பாரதி ! ! ! இவன் தான் பாரதி என்று சொல்லதகு கண்களில் கம்பீரமும், மீசையின் மிரட்டலும் அடையாளம் காட்டுகிறது. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்தசாரதி கோயிலில் நடந்த நிகழ்வின் முடிவாக சமாதானத்தை அறிவித்து சென்றான் பாரதி. ஆம் இன்றய தினம் பாரதி இப்பூவுலகைவிட்டு தமிழன்னையை சரணடைந்தான். ஏனோ அவன் பாடல்கள் கேட்கும் போதெல்லாம் என் கண்களில் கண்ணீர் என்னை அறியாமல் கலங்கும் கண்ணமா எனது குலதெய்வம் – பொன்னை உயர்வை புகழை விரும்பிடும் என்னைக் கவலைகள் … More யார் பாரதி ! ! !

அர்ஷிய – சமகாலத்தில் சமகாலத்தவரோடு நோக்கிய பயணம்

அர்ஷிய – சமகாலத்தில் சமகாலத்தவரோடு  நோக்கிய பயணம் : அர்ஷிய அவர்களை வாசக சாலை கூட்டம் ஒன்றில் சந்தித்தேன். அது ஏழரை பங்காளி வகையறாவை பற்றிய சிறு கலந்துரையாடல். வாசக பார்வையிலிருந்து அதன் நிறை குறைகளை பகிர்ந்துக்கொண்டனர். இதில் ஆச்சர்யம் என்னவெனில் இரண்டையும் சமமாக பாவித்து மேடையில் மென்மையான, அவர்க்குறிய சிறு புன்னகையில் பதிலாளித்தார். கூட்டம் கலைந்தது நானும் அவ்விடத்தை கடந்தேன். பின்னொரு நாள் சமூகவலைத்தளத்தில் ஃப்ரெண்ட் ரெகுஎஸ்ட் அளித்தேன் உடனே ஏற்றுக்கொண்ட கனத்தில்  “நட்பிற்க்கு நன்றி” … More அர்ஷிய – சமகாலத்தில் சமகாலத்தவரோடு நோக்கிய பயணம்

கௌரி லங்கேஷ்

நாளைய சரித்திரத்தை இன்றே எழுதிக்கொண்டிருந்த கௌரி லங்கேஷ் எனும் சகாப்தம் நம்மை விட்டு பிரித்தனுப்ப பட்டார், மக்களின் குரலை உயர்த்தும் அனைவர்க்கும் கொடுக்கப்படும் பரிசு இதுவோ ! இதழியலில் உள்ள அற்புதம் “இதழை விட்டு எழுத்தாணியை தொட்டு மக்களின் செவியில் புகுத்தும் விஷயங்கள்”, நாட்டில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உண்மையே.  

ஆசிரியர் தினம்

தன் வாழ்நாளில் ஆயிரம் கரங்களை உயர்த்தி ஆசி வழங்கும் ஆசானுக்கு பணிவுடன் எமது ஆசிரியர் தின வாழ்த்துக்கள் சுயநலமற்ற மனிதன் இல்லை இவ்வுலகில் அம்மா , அப்பா, ஆசான் தவிர…. #chathishutter #chathishsathiam #TeachersDay #TuesdayThoughts

தமிழ் வரி வழி பயணம்…

தமிழ் என்னும் சொல் உலகம் உயிர்பெற்ற காலத்திலிருந்து இன்றளவும் சுவாசிக்கபடும் மொழி… எட்டு திக்கும் காற்றில் பரவி கிடக்கும் மொழி, அவ்வுயிரில் என் ஓரணுவும் பங்கு கொண்டிருக்கிறது என்று நம்புகிறேன். பல மாதங்களுக்கு பின் என்னுடைய தமிழ் வரி வழி பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன் என்பதில் ஆனந்தம். எனினும் அதில் நான் தேறியவன் அல்ல, கொஞ்சம் இருந்தாலும் – அதிகம் வாசித்து பழக்கம் இல்லை, இவ்விரண்டையும் இனி கடைபிடிப்பேன். தகவல் தொழில்நுட்ப ஆதிக்கம் நிறைந்த காலத்தில், ஆங்கிலம் பேசுபவனையே … More தமிழ் வரி வழி பயணம்…

முயல்

முயன்றால் முடியா ஏதும் இல்லை முயற்சியின் விளிம்பில் நின்று – அன்று வெற்றியின் எல்லை காண்போம்  

மஞ்சுவிரட்டி

உலக பிறப்பிற்கு முதன்மை வகுத்த தமிழ் இனத்தின் அடையாளம்  வேரறுக்க  முடியா காளைப்போர். தமிழரின் குருதியில் கலந்திருக்கும் கலாச்சாரத்தை வீழ்ப்பதா !!! மரபு வழி காத்து வீர தழுவலோடு வாழ்ந்து வரும் நம்மிடம் இருந்து அடையாளத்தை பறிப்பதற்கு நீர் யார் ??? மரபுகளே இனத்தின் அங்கம். தமிழ் இனத்தின் அங்கத்தை அழிக்க எண்ணி சிங்கங்களை சீண்டியிருக்கிறது பீட்டா. முதல் நாகரீக மனிதனின் நாகரீகத்தை அழிப்பதென்பது இயலாத ஒன்று. தமிழன் யுத்தம் இல்லா காலங்களில் தன் யுத்த மரபுகளை … More மஞ்சுவிரட்டி

மறுமாற்றம்

மாற்ற இயலாத இயல்புகளை மாற்றியமைக்கும் செயற்கைசூழல் மாற்றங்கள் விரும்பி மாற துடிக்கும் மனமாற்றம் மாற்றம் என்பதே மாறா என கருதும் மனிதர்கள் மாற்ற இயலாத மரணத்தின் பாதையில் பயணிக்கும் மானுடம் இயற்கையின் மாற்றங்கள் செயற்கை எய்தி இறக்கிறது இறக்கும் தருவாயில் அதன் அருமை புரிகிறது இவண் து ச சதீஸ்வரன்

பறவை எனும் மனிதன்

பறவைகளுக்கும் துறவிகளுக்கும் நிரந்தரமான சரணாலயம் இருப்பதில்லை.. நானும் ஒரு பறவைதான் நிரந்தரம் என்பதையே அசோகௌரியமாக கருதும் பறவை இனி நான் தங்கபோகும் கிளைகளில் அருமையான அன்பின் கனிவும் நிழலும் கிடைக்குமா என்பது சந்தேகம் தான்   ஆனால் அடுத்த நொடி ஒலிதுவைதிருக்கும் ஆச்சிரியங்கள் இவ்வுலகில் ஏராளம் … ஆச்சிரியம் நிறைந்த இவ்வுலதின் மீது நம்பிக்கை வைத்து பயணிக்கிறேன்…    

என்னுடைய முதல் குட்டி கதையின் தொடர்ச்சி … II

என்னுடைய முதல் குட்டி கதையின் தொடர்ச்சி விடிந்த பெங்களூரு மறுநாள் ஒரு நாள் கழிந்த நிலையில்  வெளிப்புறத்தில் சடசடவென சத்தம் செவியை முட்ட பெரும்பாலானோர் தங்கள் அலுவுலகத்திற்கு சென்று கொண்டிருந்தனர். இந்தியாவின் சிலிகான் வேலே (silicon valley) என கூறப்படும் இடம் இன்று காடுகள் அழித்து கட்டடங்கள் பரப்பி வருகிறது காரணம் இருப்பிடத்தை விட மக்கள் தொகை அதிகம். மாரத்தஹள்ளி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள் ஐந்து வருடங்களுக்கு முன்பு காடுகளாக இருந்த இடம் அன்பு அலுவுலத்திற்கு … More என்னுடைய முதல் குட்டி கதையின் தொடர்ச்சி … II

என்னுடைய முதல் குட்டி கதை I

என்னுடைய முதல் குட்டி கதை தொழில்நுட்பம் – விவசாயம் இரண்டிற்கும் பந்தமான ஒரு அணு பயணித்து கொண்டிருந்தது தன் சுவாசத்தை விட்டு மதுரையிலுருந்து சக்கரம் சாலையில் சண்டையிட்டு ஓர் இடத்தில நின்றுகொண்டிருந்தது மெதுவாக கண்களை திறந்து பார்த்து இமையின் காட்சி மூளைக்கு செல்லும் தருணத்தில் திண்டுக்கல், கரூர், சேலம், கிருஷ்ணகிரி என நான்கு திருப்புமுனைகளை தாண்டி ஓசூரை வந்தடைந்தது, அதிகாலை குளிர்ந்து காற்று முடியை வார தன் கைகளை கொண்டு கண்களை கசக்கி தமிழகத்தின் எல்லையை பார்த்தான் … More என்னுடைய முதல் குட்டி கதை I