திண்ணை எங்கே???

தமிழ் என்னும் சொல் சொல்லும் போது, முடியும் ‘ழ்’ நாவை இனிப்படய செய்கிறது.

எனது இரண்டாம் பதிப்பு – திண்ணை எங்கே???

மானுடம் ஜனனித்து வளர்ந்து முன்னேறி இன்று இறுதியாக தான் தான் ஆறறிவு என்று தன்னை தானே போற்றிக்கொண்டு இயந்திரமாக்கள் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறான்

தமிழ் தோன்றிய காலத்திலிருந்து கட்டமைப்புகளின் அங்கங்கள் படிப்படியாக உயர்ந்து வியத்தகு அமைப்பினை வளர்த்து வந்தன.

அதற்க்கு சான்று பல அவற்றில் சில – தி௫ச்சிராப்பள்ளியில் அமைந்துள்ள கரிகால சோழனின் கல்லணை – பிரமிக்க வைக்கும் கட்டமைப்பு.

சங்கம் தொட்டு தமிழ் வளர்க்கப்பட்ட காலத்தில் மதுரை தளங்கள் வியத்தகு அமைப்பினை கொண்டு இன்றளவும் கம்பீரமாக காட்சியளிக்கிறது. மதுரை மீனாக்ஷி அம்மன் கோயில், திருமலை நாயகர் மஹால், யானை மலை குகை கோயில், திருபரங்குன்றம், சமண கல்வெட்டுக்கள் கண்களை பிரம்மாண்டம் அடைய செய்கிறது.

மதுரை மாவட்டம் திண்டுக்கல் மாவட்டமாக விரிவடையும் போது திப்பு சுல்தானின் மலைக்கோட்டை கட்டமைப்புகள் ஆச்சர்யம்.
சரி, எங்கே திண்ணை.
பண்டய காலத்தில் கட்டப்பட்ட இருபிடத்தின் அமைப்பு இன்று வளர்ந்து வரும் தலைமுறைகள் அறிய வாய்ப்பு இல்லை என்று நான் கருதுகிறேன்

அன்று , அவர் செய்த உபசரிப்புகள் தனித்தன்மை வாய்ந்தது. கட்டப்படும் அனைத்து இருப்பிடத்தின் (வீடு) வாயிலிலும் திண்ணை என்ற அமைப்பின் பங்கு மிகமுக்கியமான ஒன்றாக கருதப்பட்டது.

காரணம், மற்ற பகுதிகளிலிருந்து வரும் வணிகர்கள், பெண் எடுத்தோர், பெண் கொடுத்தோர், முனிவர்கள், என இளைப்பாறி விட்டு செல்ல உதவின மேலும் அவர்களுக்கு விருந்து உபசரிப்பும் அளிக்கப்பட்டது அதுதான் மனிதனை மனிதன் நம்பிய காலம். மானுடம் வென்றது

கால்போக்கில் அவை விரிவடையும் நிலை தொடர தோல்வியடைந்தது என்பதும் உண்மை.

கட்டமைப்பின் நாகரீகம் காலபோக்கில் சரிவடைந்துக்கொண்டிருக்கிறது என்பதற்கு சாட்சி இன்றைய கட்டமைப்புகள்

பண்டைய காலத்தில் திண்ணையின் பங்கு கட்டமைப்பின் அழகை மெருகேற்றியது.

ஆனால் இன்று அபார்ட்மெண்டு என்ற பேரில் எழுப்பபடும் கட்டிடங்கள் பெரும்பாலும் எரி, குளம், குட்டைகள் நிரப்புகின்றன இயற்கையாக பொழியும் மழைக்கு பதிலாக (செங்)சிமெண்ட் கற்களை.
மனிதனை மனிதன் நம்பிய போது அங்கு ஐய்யம் ஏற்படவில்லை அதனால் உரியமைகள் கொண்டாடபட்டன

இன்று எழுப்பபட்டிருக்கும் அபர்ட்மெண்ட்களை தான் இன்றய பெரும்பாலான மக்கள் விரும்புகின்றனர்.
இதனால் நாம் நம் உறவினர்களை சந்திக்க செல்லும் பொது நம் உரிமைகளை அங்கு இழக்கிறோம் காரணம் காவலுக்கு நிற்க்கும் நண்பர்களிடம் நாம் நம்மை அறிமுகம் செய்துக்கொண்டு, நாம் இவர்களை தான் சந்திக்க வந்திருக்கிறோம் என உறுதிசெய்து, உரிமம் பெற்று கையொப்பம் இட்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது அதற்க்கு காரணம் பல இருக்கலாம் ஆனால் மனிதன் மீது மனிதன் வைத்த நம்பிக்கை சரிவடைந்துகொண்டே வருகிறது என்பது அப்பட்டமான உண்மை என்பது என் கருத்தும் கூட…

மானுடம் வெல்வதற்க்கு நம்பிக்கை வளர்க்கபடவேண்டும்
இவண்
து.ச.சதீஷ்வரன்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s