யார் பாரதி ! ! !

யார் பாரதி ! ! !
இவன் தான் பாரதி என்று சொல்லதகு கண்களில் கம்பீரமும், மீசையின் மிரட்டலும் அடையாளம் காட்டுகிறது.

திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்தசாரதி கோயிலில் நடந்த நிகழ்வின் முடிவாக சமாதானத்தை அறிவித்து சென்றான் பாரதி. ஆம் இன்றய தினம் பாரதி இப்பூவுலகைவிட்டு தமிழன்னையை சரணடைந்தான்.

ஏனோ அவன் பாடல்கள் கேட்கும் போதெல்லாம் என் கண்களில் கண்ணீர் என்னை அறியாமல் கலங்கும்

கண்ணமா எனது குலதெய்வம் –
பொன்னை உயர்வை புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னதகாதென்று
என்னை பாதித்த வரி ( புன்னாகவராளி ராகம்)

எனது ஐந்தாம் வகுப்பில் பாரதி திரைப்படம் வெளியானது. என்னுடைய பள்ளியிலிருந்து அரசின் உத்தரவின் படி அழைத்து சென்றனர். அங்கு தான் முதலில் பாரதியை கண்டேன் – காட்சியாக.

அவனைஅதிகம் படித்ததும் இல்லை புரிந்து கொண்டதும் இல்லை அதனால்தான் ஏனோ என் ஆழ் மனதை அசைத்து காட்டியவன் பாரதி…

துன்பமினியில்லை, சோர்வில்லை, தோர்பில்லை
நல்லது தீயது நாமறியோ மன்னை!
நல்லது நாட்டுக ! தீயதையோட்டுக…..

பாரதியின் வரிகள் இளயராஜாவின் இசையில் சோர்வுறும் போதெல்லாம் என்னை சேவை செய்ய தூண்டும் வரிகள்…

சரி, யார் பாரதி – சமூகத்தின் மீது பற்றுக்கொண்டவனா ! , கண்ணனின் காதலனா ! பாமரனின் நண்பனா! பாப்பாவின் வழிகாட்டியா !

பஞ்சலியின் மித்ரன் கண்ணனா , பாரதியா என்ற கேள்வியும் என் மனதில் எழுகிறது- பாஞ்சாலி சபதம் வரிக்கும் போது

சரி யார் தான் பாரதி!!!
எவன் சுதந்திர காற்றை சுவாசிக்க துடித்தானோ, எவன் சாதி வேற்றுமையை அருத்தானோ, எவன் பெண் விடுதலையை முழக்கமிட்டானோ, எவன் எழுத்துகளால் தூண்டினானோ அவனே பாரதி

நான் பாரதியை கண்டதில்லை அதனால் தான் ஏனோ அவனை காதலிக்கிறேன், அவனும் காதலித்தான் தமிழயும், கண்ணமாவையும்..

கண்ணமா என் காதலி என்னும் தலைப்பில் ->
சுட்டும் விழிசுடர்தான் – கண்ணமா
சூரிய சந்திரரோ ?
வட்ட கரியவிழி கண்ணமா ?
வானக்கருமை கொல்லோ !
பாரதியின் வரிகள் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் செவியை முத்தமிடுகிறது.

சுதேசி மித்ரன் பாதிரிக்கை பதிப்பின் மாதிரியை இணையதளதில் பார்திருக்கிறேன், படிதிருக்கிறேன் அவன் கிறுக்கல்களை கண்டு கிருகனானேன்.

ஏனோ இதழியல் கற்க ஆவல் ஏற்பட்டது, கற்றேன் காமராஜர் பல்கலைக்கழகதில்.

பாரதி ஆசிரியராக பணி புரிந்த ஊர் எனது சொந்த ஊர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் ஆனால் அங்கு எனது கல்வியை தொடரும் வாய்ப்பு கிட்டவில்லை…

தேசிய கவி சுப்பிரமணிய பாரதியார்யின் ஜனனம் தமிழின் உயிர்ப்பு – 11 டிசம்பர் 1882

தன்னை அறிந்தவன் மரணத்தை கண்டு அஞ்சுவதில்ல, அது வரும் போது பாரதி அங்கு இல்லை – 12 செப்டெம்பர் 1921 ( அதிகாலை 1.30 மணியளவில் – 11 செப்டெம்பர் 1921 நள்ளிரவு 1.30 மணியளவில் )

இவண்
து . ச. சதீஷ்வரன்
பாரதியின் ரசிகன்

 


2 thoughts on “யார் பாரதி ! ! !

  1. உண்மையில் பாரதியின் எண்ணம் உன் எழுத்தில் பிரதிபலிக்கிறது..வாழ்க வளமுடன்

    Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s