என்னுடைய முதல் குட்டி கதையின் தொடர்ச்சி
விடிந்த பெங்களூரு மறுநாள் ஒரு நாள் கழிந்த நிலையில் வெளிப்புறத்தில் சடசடவென சத்தம் செவியை முட்ட பெரும்பாலானோர் தங்கள் அலுவுலகத்திற்கு சென்று கொண்டிருந்தனர். இந்தியாவின் சிலிகான் வேலே (silicon valley) என கூறப்படும் இடம் இன்று காடுகள் அழித்து கட்டடங்கள் பரப்பி வருகிறது காரணம் இருப்பிடத்தை விட மக்கள் தொகை அதிகம். மாரத்தஹள்ளி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள் ஐந்து வருடங்களுக்கு முன்பு காடுகளாக இருந்த இடம்
அன்பு அலுவுலத்திற்கு செல்பவர்களை பார்த்துக்கொண்டிருந்தான், தானும் இவ்வாறு தான் செல்லவிருக்கும் போலும் என்று நினைந்து கொண்டிருந்தான்
அன்பு எத்துறையிலும் சிறந்து விளங்கும் மதி ஆற்றல் கொண்டவன் அவனுக்கு விவசாயத்தில் நாட்டம் அதிகம் எனினும் தன் தந்தையின் விருப்பத்திற்கேற்ப பொறியியல் சேர்ந்தான் தேர்ச்சி பெற்றான், பணியில் சேர்ந்தான் பெங்களுருவில்
காலை பத்து மணி முதல் ஆறு மணி வரை கணினி முன்பு மூளைக்கு வேலை, சிறந்து விளங்கினான் ஆனால் மன நிறைவு இல்லை
வீடு நிலம் இவற்றின் சிந்தனையிலே பல நாட்கள் கழிந்தன. வார விடுமுறையில் ஊருக்கு சென்றான் மகிழ்ந்தான், பெங்களூரு திரும்பினான் பர்கர், பீட்சாவுடன் பணி புரிந்தான் மெலிந்தான்
யோசித்தால் மனிதன் எதற்காக ஓடுகிறான் வயிறு, சாப்பாடு… தொழில்நுட்பத்தின் உச்சியில் நின்று கொண்டு நாம் நெல்லை சாவடித்து பர்கர், பீட்சா என உண்டு கொண்டிருக்கிறோம்
மூன்று வருடங்கள் கழிந்த நிலையில் தன் வீடு, நிலத்தின் மீது கொண்ட காதல் குறையவில்லை குழம்பினான்…
உலகத்துக்கே சோறு போடும் விவசாய குடும்பத்தில் பிறந்து, யாருக்கோ உழைத்து கொண்டிருக்கிறோம் என்று பதறினான்
காலங்கள் கடந்து சென்றுகொண்டிருந்தது, அன்பு சுயத்தை இழந்த நிலையில் சிந்தித்து கொண்டிருந்தான்
படித்த கல்விமுறை நம்மதன்று குருகுல கல்வி முறையை அழித்தொழித்து மெக்காலே கல்வி முறை, பணிபுரியும் அலுவுலகத்தின் நிலையும் கிட்டத்தட்ட அதே தான் நம் சுயத்தை இழந்து வருகிறோம் என்று முடிவுக்கு வந்தான்
பெங்களுருவில் ஸ்டார்ட் அப் என்று சொல்லக்கூடிய ஒரு அங்கம் சுய தொழில் செய்வதற்கு உந்துகோலாக உதவும் அமைப்புகள் பல உள்ளன. இதன் தொடர்பான கருத்தரங்கங்கள் பலவற்றில் அன்பு பங்கு கொண்டு தானும் ஏதேனும் செய்யவேண்டும் என்ற நோக்கத்தோடு இணையதள தேடுதல், பதிவுகள் என ஆயத்தங்கள் கொண்டான்
தொழில்நுட்பத்தின் நேர் எதிரான விவசாயத்தை கருத்தரங்கில் முன் வைத்தான். பேச்சிலும் கருத்திலும் முன்னின்றான் , வென்றான்
நம் தாய்நாட்டிக்காகவும், நம் மக்களுக்காகவும், நம் உலகதிர்க்கவும் விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தி. விவசாயத்தில் புரட்சி செய்யும் நோக்கத்தோடு தான் சொந்த ஊரிலிந்து the first agriculture start up தொடங்கினான்.. .
“தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றான் பாரதி”
உணவு முக்கியம் அதனை விட ஆரோக்கியமான உணவு அவசியமான ஒன்று, இயற்கை விவசாயத்தால் மட்டுமே அதனை பரிசளிக்க முடியும் என்று ஆணித்தனமாக நம்புகிறேன்
தொழில்நுட்பத்தில் எத்தனையோ புரட்சி நடந்துகொண்டிருக்கின்றன அதனையே விவசாயத்தில் அக்கறை கொண்டு செயல்படுத்தினால் சிறப்பான உலகம் நமக்காக காத்திருக்கிறது என்பதில் ஐயமில்லை
மேல குறிப்பிட்ட கதையில் ஏதோனும் சந்தி பிழை, காட்சி அமைப்பு, கதையின் நடையில் குறை இருப்பின் மன்னிக்கவும், தாங்கள் அதனை மேற்குறியீட்டு காண்பித்தால் இனி வரும் தொடரில் சீர் செய்து கொள்வேன்