உலக பிறப்பிற்கு முதன்மை வகுத்த தமிழ் இனத்தின் அடையாளம் வேரறுக்க முடியா காளைப்போர்.
தமிழரின் குருதியில் கலந்திருக்கும் கலாச்சாரத்தை வீழ்ப்பதா !!! மரபு வழி காத்து வீர தழுவலோடு வாழ்ந்து வரும் நம்மிடம் இருந்து அடையாளத்தை பறிப்பதற்கு நீர் யார் ???
மரபுகளே இனத்தின் அங்கம். தமிழ் இனத்தின் அங்கத்தை அழிக்க எண்ணி சிங்கங்களை சீண்டியிருக்கிறது பீட்டா.
முதல் நாகரீக மனிதனின் நாகரீகத்தை அழிப்பதென்பது இயலாத ஒன்று.
தமிழன் யுத்தம் இல்லா காலங்களில் தன் யுத்த மரபுகளை காலம் தவறியும் மறக்ககூடா என மஞ்சுவிரட்டியை கையாண்டான்.
இன்று தடையை மீறி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வீறுகொண்டு நடத்தினோம், நடத்துவோம் தடையை நீக்கும் வரை
திமில்களின் திமிரை அடக்க இயலாது தமிழரின் பண்பை ஒழிக்க இயலாது
வரலாறு
ஏறுதழுவல் – தமிழர்களின் மரபுவழி விளையாட்டுகளில் ஒன்று ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும்.
நம் சல்லிக்கட்டு மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு
புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை,
திருவண்ணாமலை மாவட்டம் ஆதமங்கலம் புதூர் மற்றும் தேனீமலை,
தேனி மாவட்டம் போன்ற ஊர்களில், ஆண்டுதோறும் தை மாதத்தில் பொங்கல் திருநாளையொட்டி நடத்தப் பெறுகின்றன.
வகைகள்
சல்லிக்கட்டு தமிழ்நாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக நடைபெறுகிறது.
வேலி சல்லிக்கட்டு
வேலி மஞ்சுவிரட்டு எனப்படும் விளையாட்டில் ஒரு திடலில் காளைகள் அவிழ்த்துவிடப்படுகின்றன. அவை எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் ஓடுவதும் அவற்றை இளைஞர்கள் விரட்டுவதும் நடைபெறுகிறது.
வாடிவாசல் சல்லிக்கட்டு
மதுரை அலங்காநல்லூர் போன்ற இடங்களில் வாடிவாசல் வழியாக வெளியேறும் காளைகளை இளைஞர்கள் விரட்டிச் சென்று அதன் திமில் மீது தொங்கியபடி குறிப்பிட்ட தூரம் செல்கிறார்கள்.
வடம் சல்லிக்கட்டு
வட தமிழகத்தில் வடம் மஞ்சுவிரட்டு என்ற பெயரில், 20 அடி நீளக் கயிற்றால் காளையைக் கட்டி, இருபுறமும் காளையை ஆண்கள் இழுத்துப் பிடிக்க, ஒரு சிலர் மட்டும் அதன் முன்னே நின்று கொம்பில் உள்ள பரிசுப் பணத்தை எடுக்க முயல்கிறார்கள்.
இவண்
து ச சதீஸ்வரன்