அர்ஷிய – சமகாலத்தில் சமகாலத்தவரோடு நோக்கிய பயணம்

அர்ஷிய – சமகாலத்தில் சமகாலத்தவரோடு  நோக்கிய பயணம் :

அர்ஷிய அவர்களை வாசக சாலை கூட்டம் ஒன்றில் சந்தித்தேன். அது ஏழரை பங்காளி வகையறாவை பற்றிய சிறு கலந்துரையாடல். வாசக பார்வையிலிருந்து அதன் நிறை குறைகளை பகிர்ந்துக்கொண்டனர்.

இதில் ஆச்சர்யம் என்னவெனில் இரண்டையும் சமமாக பாவித்து மேடையில் மென்மையான, அவர்க்குறிய சிறு புன்னகையில் பதிலாளித்தார். கூட்டம் கலைந்தது நானும் அவ்விடத்தை கடந்தேன்.

பின்னொரு நாள் சமூகவலைத்தளத்தில் ஃப்ரெண்ட் ரெகுஎஸ்ட் அளித்தேன் உடனே ஏற்றுக்கொண்ட கனத்தில்  “நட்பிற்க்கு நன்றி” என்றேன் இது மட்டுமே அவரிடன் நான் கதைத்த வார்தைகள்.

அவர் காலமான செய்தியை கேட்டதும் நம்பவே முடியவில்லை, மதுரையில் 15.4.2018  நாளன்று நடந்த நினைவேந்தல் கூட்டத்தில் கலந்துக்கொண்ட பின்பு தான் அவரை முழுமையாக புரிந்துக்கொண்டேன், அத்துணை தம்பிகளை அவர் அன்பிற்க்கு உண்டோ என்ற ஆச்சர்யம், ஒவ்வொருவரின் நாவிலிருந்து எழும் சொர்க்களில் சோகம் கலந்த கனத்த உண்மைகள் பொதிந்துக்கிடந்தன

அர்ஷிய – ஜீன்ஸ் மடிப்பு – மென்மையான புன்னகை – ஸ்கூட்டர் ஓட்டும் ஸ்டைல் – ராசா – தம்பி என அவர் உரைக்கும் வார்தைகள் – பொறுமை – யாவரின் கருத்துகளை ஆராயும் பக்குவம்   என பலவற்றை பகிர்ந்தனர்.

இதுவரை அவர் எழுத்துக்களை வாசித்ததில்லை  – எனினும் அவர் மீது ஒரு ஈர்ப்பு.

ஒருவரின் அரசு வேலை ஓய்வு பெரும் நாளன்று அல்லது மரணத்தின் பின்னொரு நாளன்றே அவரை புகழ் பாட வேண்டிய நிலையில் மனிதர்கள் நாம் உள்ளோம்.

சமகால படைப்பாளிகளை சமகாலத்தில் போற்றுவதே சிறந்த அன்பளிப்பாகும்

அவர் வரித்த எழுத்துக்களை முழுவதும் வாசிப்பேன்….

இவண்

சதீஷ்வரன்

30704542_2401960349829491_3214816689304633344_n.jpg


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s